search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் முகாம்"

    • மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • உதவி இயக்குநர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    இந்திய அஞ்சல் துறையில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் மதுரை பி.பி.குளத்தில் உள்ள தெற்கு மண்டல அஞ்சல் துறை அலுவலகத்தில் வருகிற
    27-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் தங்கள் குறைகளை தெரிவிக்க புகார் மனுக்களை 15-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை ( மணி யார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற் றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    புகார், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்த மாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியடையாத வர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும், இந்த முகாமில் எடுக்கப்பட மாட்டாது. கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    தபால்களை உதவி இயக்குநர், அஞ்சல்துறை அலுவலகம், தெற்கு மண்டபம், மதுரை-625 002 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். தபால் உறையின் முன்பக்க மேல்பகுதியில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்-ஜூன் 2023 என குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தெற்கு மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குநர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

    • காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
    • இம்முகாமில் 134 மனுக்கள் வந்தது. இதில் 111 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு காண குறைத்தீர்க்கும் முகாம் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் 28 காவல் நிலையங்கள், மாவட்ட குற்றபிரிவு மற்றும் நில அபகரிப்பு பிரிவு என மொத்தம் 30 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இம்முகாமில் 134 மனுக்கள் வந்தது. இதில் 111 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள் இளங்கோவன், பாலசுப்பிரமணியன், டிஎஸ்பிக்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர், நவாஸ் தனிப்பிரி காவல் ஆய்வாளர் அன்பழகன் மற்றும், உதவிக்காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • மீதமுள்ள 9 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தருமபுரியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நிலத்தகராறு, சொத்து தகராறு, பொது வழி பிரச்சனை, குடும்பத் தகராறு உள்ளிட்ட மொத்தம் 129 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த விசாரணையின் போது மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முகாமில் 120 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 9 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, நவாஸ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் தளவாய்பட்டி இரும்பாலை ரோட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) குறைதீர்க்கும் முகாம் மண்டல ஆணையர் சிவகுமார் தலைமையில் நடக்கிறது.
    • அதன்படி அன்று காலை 11.30 மணிக்கு சந்தாதாரர்களுக்கும் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் விஜய் ஆனந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் தளவாய்பட்டி இரும்பாலை ரோட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) குறைதீர்க்கும் முகாம் மண்டல ஆணையர் சிவகுமார் தலைமையில் நடக்கிறது. அதன்படி அன்று காலை 11.30 மணிக்கு சந்தாதாரர்களுக்கும் நடக்கிறது.

    மதியம் 3 முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் முகாம் நடக்கிறது. எனவே முகாமில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறை மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பார்கள்.

    குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரே நேரடியாக மனுக்களை பெறுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.இதன்காரணமாக அன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க பொதுமக்களின் கூட்டம அலைமோதும்.

    அதன்படி திங்கட்கிழமையான இன்று மனு அளிக்க காலை முதலே முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக் கானோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் இன்று காலை அரசு அலுவல் காரணமாக கலெக்டர் வெளியே சென்று விட்டார். ஆனால் பொதுமக்களிடம் மனுக்களை பெற எந்தவித மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    கலெக்டர் இல்லாதபோது அதற்கு அடுத்த தகுதியில் உள்ள அதிகாரிகள் முகாமை நடத்தி மனுக்களை பெறுவது வழக்கம். ஆனால் இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை கண்டுகொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மதுரை அதன் மண்டலத் துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    அதன்படி இந்த மாதம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பங்கேற்பவர்கள் t.ly/nPTtஎன்ற இணைய தள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்த பின்னரே இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    மதுரை மாவட்டத்துக்கு திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளியிலும், தேனி மாவட்டத்துக்கு கம்பம் ஸ்ரீசக்தி விநாயகா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், சிவகங்கை மாவட்டத்துக்கு தேவகோட்டை ஆர்ச் அருகில் வீரா மருத்துவ மனையிலும், விருதுநகர் மாவட்டத்துக்கு விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின்பின்புறம் கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பரமக்குடி கணபதி செட்டியார் வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் பி.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    • 80 மனுக்கள் பெறப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு முகாம் உதவி கலெக்டர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் தனியார் பஸ் வசதி வேண்டி, இலவச வீட்டு மனை பட்டா, ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளி உதவி தொகை, சொட்டு நீர்ப்பாசனம் அனுமதி, ஆரணி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மற்றும் முறைகேடு புகார் உள்ளிட்ட 80 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த முகாமில் ஆரணி ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு பாலில் தண்ணீர் கலந்து முறைகேட்டில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கொடுக்கும் நடவடிக்கையில் தற்போதைய அ.தி.மு.க. தலைவர் ஈடுபடுவதாகவும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக இயக்குநர்கள் யேசுராஜன், குப்பன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

    இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 287 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி னார்கள்.

    கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து, உரிய துறை அலு வலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டுமென அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சமூகப் பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொன்னேரி அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • ரேஷன் அட்டை,நலவாரிய அட்டை, புதிய ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட 106 மனுக்கள் பெறப்பட்டது.

    பொன்னேரி அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் இருளின இன ஜாதி சான்றிதழ்கள், ரேஷன் அட்டை,நலவாரிய அட்டை, புதிய ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட 106 மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ் மண்டல துணை தாசில்தார் தேன்மொழி,ஒன்றிய கவுன்சிலர் ஒரக்காடு பாஸ்கர் துணைத் தலைவர் லட்சுமணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மத்திய மண்டலஅலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமார் தெரு, கிருஷ்ண ராயர் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரெயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்க லிங்கநகர், துரைச்சாமி நகர், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணிய புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

    குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை மாவட்ட வருவாய் அலு லவரிடம் வழங்கினார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுலவலர் மணி மேகலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை மாவட்ட வருவாய் அலு லவரிடம் வழங்கினார்கள். மனுக்க ளைப் பெற்ற டி.ஆர்.ஓ, அவற்றை உரிய அலுவலர்க ளிடம் வழங்கி, மனுக்களை விரைந்து பரி சீலனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதி காரிகள் கலந்துகொண்ட னர்.

    • சிவகங்கை அருகே காவல்துறை சார்பில் மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • முகாமில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகர், வட்டத்தை சேர்ந்த 7காவல் நிலையங்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி திருக்கோஷ்டியூர் கீழச்சிவல்பட்டி எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய்,பெரியசாமி, கலையரசன், சாமுண்டீசுவரி, சேதுபாமா மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    ×